ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்;ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது சுதந்திரம்,எமது உரிமை;எமது கெளரவம்-தமிழ் தேசியத் தலைவர்

Wednesday, June 9, 2010

வரிபுலிப் படையாய்... -கண்மணி


வீசியடித்த புரட்சிப் புயல்
ஓய்ந்ததாய் பரப்புரை
செய்யப்பட்டது.
புயலுக்கு ஓய்வா?
புரியாத மடையர்கள்
சிங்கள குடையின் கீழ்.
வீரிய வித்துக்களாய்
விடுதலை விளைநிலத்தில்
வீழ்ந்து முளைக்கும்
மாவீரர் வாரிசுகள்...
வரிசையாய் களம்காண
வரலாற்றில் காத்திருக்க
வால் அறுந்த நரியாக
ஊளையிடும் பகைவன்கூட்டம்.

சிங்களத்தின் கரங்களிலே
வீழ்ந்து கிடக்க
விலைபோன கூட்டமல்ல
எம் மறவர் படை.

மறந்துவிட்ட தமிழர் முகத்தை
மறுபடியும் தோண்டி எடுத்து
மறுபதிவு செய்துவிட்ட
புலிபடையின் பெருந்தலைவன்
பிறந்திட்ட பெருமை குலம்
எம் தமிழர் குலம்.

கோழைகளாய் தமிழர் சிலர்
குள்ளநரியாய் பதுங்குவதால்
வீரம்கொண்ட எமதுபடை
வீழ்ந்தது என விளிம்புவது
சிறுமதி கூட்டத்தின்
சிணுங்கல் தான்.

ஏறுபூட்டி நிலத்தில் விழும்
அதே நேரம் எதிரி மார்பில்
பகைப்புண் தரும்.
எகிறி பாயும் எமது பாய்ச்சல்
எதிரி குடையை
மண்ணில் வீழ்த்தும்.

அடங்கிக்கிடந்து
செத்துப்போக
அடிமை வாழ்வை
கெஞ்சிக்கேட்க
எம் தலைவரின்
கூட்டம்
தாழ்ந்தது அல்ல.

அடக்குமுறையை
உடைத்துப்போட
பகைவனின் திமிரை
எரித்துப்போட
எழுந்ததுதான்
எமது வீரப்படை.

எவர்தான் வந்து
தடுக்க நினைப்பர்
சமர்களம் வந்து
எதிரில் நிற்பர்.

புறவழிக் கண்டு
துரோகம் செய்து
வென்றிட நினைக்கும்
வெட்கம் கெட்ட
பகைவனின் படை
புலிப்படை எதிரில்
புலப்படும் காலம்
புள்ளினம் போல
பறந்து போவர்.

வரிபுலிப் படையாய்
தமிழர் படை இருக்கும்.
தலைவனின் தலைமையில்
தமிழீழம் படைக்கும்.
தகர்த்திட நினைக்கும்
தரங்கெட்ட இனத்தை
தரணியிலிருந்தே
துடைத்தேப் போடுவோம்.
தூய தமிழால்
வாழ்த்துச் சொல்வோம்.

1 comments:

Anonymous said...

excellent words sakothara.
we are with you.
tadam maraatha em thalaivan vaiko gave a very good speach at azhwar pet.but not even a single tamil news paper published the contents.
its unfortunate that tamils have no tamil news paper taht never bends with dmk or ruling party as they depend th dmk or ruling party for ad in their paper.
regards
vellai varanan